தினத்தந்தி

உலக நீச்சல் போட்டியில் பெல்ப்சின் சாதனையை ஹங்கேரி வீரர் கிறிஸ்டோப் மிலாக் முறியடித்தார்.

 

18-வது உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் ஹங்கேரி வீரர் கிறிஸ்டோப் மிலாக் 1 நிமிடம் 50.73 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் 2009-ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இந்த பிரிவில் 1 நிமிடம் 51.51 வினாடிகளில் இலக்கை அடைந்ததே முந்தைய சாதனையாக இருந்தது. அதை 19 வயதான கிறிஸ்டோப் மிலாக் இப்போது முறியடித்துள்ளார்.

இங்கிலாந்தின் பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்பு

இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் முறைப்படி 24.07.2019 பதவியேற்றுக்கொண்டார்.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மேயால் வெற்றிகரமாக செய்து முடிக்க இயலவில்லை. இதனால் அவர் பதவி விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரை (பிரதமரை) தேர்வு செய்யும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில்  போரிஸ் ஜான்சன் 45 ஆயிரத்து 497 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக (பிரதமராக) தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போரிஸ் ஜான்சன், இன்று பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
  ஜான்சன், இங்கிலாந்து தம்பதியருக்கு 1964-ம் ஆண்டு, ஜூன் மாதம் 19-ந் தேதி அமெரிக்காவில் நியூயார்க் நகரின் மேன்ஹாட்டன் பகுதியில் பிறந்தவர்; லண்டன் மேயர் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி

சந்திரயான்-2: புவி சுற்றுவட்டப் பாதையில் முதல்நிலை உயர்த்தும் பணி வெற்றி

வெற்றிகரமாக செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை, புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை உயர்த்தும் பணியை இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் புதன்கிழமை தொடங்கினர். அன்றைய தினம் பிற்பகல் 2.52 மணியளவில் முதல்நிலை உயர்வை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.

 மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நிலவை ஆய்வு செய்யப்போகும் சந்திரயான்-2 விண்கலம், இந்தியாவின் சக்திவாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்3-எம்1 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து கடந்த திங்கள்கிழமை பிற்பகலில் விண்ணில் செலுத்தப்பட்டு, திட்டமிட்டதைவிட 6000 கி.மீ. தொலைவிலான புவி சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தப்பட்டது.
அதாவது, புவியிலிருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,475 கி.மீ. தொலைவிலும் உடைய நீள்வட்டப் பாதையில் புவியை சுற்றிவரும் வகையில் விண்கலம் நிறுத்தப்பட்டது.
சுற்றுவட்டப் பாதையில் அதன் நிலையை உயர்த்தும் பணியை விஞ்ஞானிகள் புதன்கிழமை தொடங்கினர். அதன்படி, விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் என்ஜினை தரைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி 57 விநாடிகள் இயக்கி, திட்டமிட்டபடி புவியிலிருந்து குறைந்தபட்சம் 230 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 45,163 கி.மீ. தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு விண்கலத்தை வெற்றிகரமாக விஞ்ஞானிகள் நிலை உயர்த்தியுள்ளனர்.
இரண்டாவது நிலை உயர்வை விஞ்ஞானிகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) அதிகாலை 1.09 மணிக்கு மேற்கொள்ள உள்ளனர். அதன் மூலம் புவியிலிருந்து குறைந்தபட்சம் 262.9 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 54,848 கி.மீ. தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு விண்கலம் நிலை உயர்த்தப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து ஜூலை 29, ஆகஸ்ட் 2, 6, 14 ஆகிய தேதிகளிலும் விண்கலம் படிப்படியாக நிலை உயர்த்தி இறுதியாக புவியிலிருந்து குறைந்தபட்சம் 278.4 கி.மீ. தொலைவையும், அதிகபட்சம் 4,12,505 கி.மீ. தொலைவையும் கொண்ட நீள்வட்டப் பாதையில் சுற்றிவரும் வகையில் நிறுத்தப்படும்.
இந்த இறுதி புவி சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் சுற்றிவரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதியன்றே, நிலவை நோக்கி நகர்த்தும் பணியும் தொடங்கப்படும். தொடர்ந்து 5 நாள்கள் இந்த நகர்வு நடைபெறும். பின்னர் ஆகஸ்ட் 20-ஆம் தேதியன்று நிலவின் சுற்றுவட்டப் பாதையை விண்கலம் சென்றடையும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இவ்வாறு நிலவின் சுற்றுவட்டப் பாதையைச் சென்றடையும் விண்கலம், தொடர்ந்து 13 நாள்கள் நிலவைச் சுற்றிவரும். பின்னர் ஏவப்பட்ட 43 நாளில், அதாவது செப்டம்பர் 2-ஆம் தேதியன்று ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் பிரித்துவிடப்படும். பின்னர் தொடர்ந்து 4 நாள்கள் நிலவைச் சுற்றிவரும் லேண்டர், ராக்கெட் ஏவப்பட்ட 48-ஆம் நாளான செப்டம்பர் 7-ஆம் தேதியன்று நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி
அமெரிக்காவில் ஒற்றை நபர் பயணம் செய்யும் விமானம் அறிமுகம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ‘லிப்ட்’ என்ற நிறுவனம் ஒற்றை நபர் மட்டும் பயணிக்கக்கூடிய விமானத்தை தயாரித்துள்ளது. ஒற்றை என்ஜின் கொண்ட ‘ஹெக்சா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்துக்கு உள்நாட்டு விமான ஒழுங்காற்று அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது.196 கிலோ எடை கொண்ட இந்த விமானம் 15 நிமிடத்தில் புறப்படத் தயாராகும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் தண்ணீரில் மிதக்கும் வகையிலும், அவசர காலத்தில் உயிர் பிழைக்க பாராசூட் உதவியுடனும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அறுங்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த இலகு ரக விமானம் அரசு அனுமதியோடு டெக்சாஸ் மாகாணத்தில் சோதித்து பார்க்கப்பட்டது. சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக தெரிவித்துள்ள ‘லிப்ட்’ நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் இந்த விமானத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர முயன்று வருவதாக கூறியது.

மின்சாரம் மூலம் இயங்கும் இந்த விமானத்தை இயக்குவதற்கு விமானிக்கான உரிமம் பெற வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலைவராக ரஜ்னீஷ் குமார்  நியமனம்

 

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலைவராக ரஜ்னீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது வங்கியின் தலைவராக உள்ள அருந்ததி பட்டாச்சார்யாவின் பதவிக் காலம்  முடிவடைகிறது. அக்டோபர் 7-ம் தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு ரஜ்னீஷ் குமார்

இப்பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CURRENT AFFAIRS

ஆந்திராவின் புதிய ஆளுநராக பிஸ்வபூஷண் பதவியேற்பு

ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேச ஆளுநராக கடந்த 2009 டிசம்பரில் இ.எஸ்.எல்.நரசிம்மன் பொறுப்பேற்றார். ஆந்திர பிரதேசத் தில் இருந்து தெலங்கானா உரு வான பிறகு இரு மாநிலங்களுக்கும் அவர் ஆளுநராக பதவி வகித்து வந்தார்.

 

இவர் தனது பதவிக்காலத்தில் கிரண்குமார் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, கே. சந்திரசேகர ராவ் (2 முறை), ஜெகன்மோகன் ரெட்டி என 5 முறை முதல்வர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்